சென்னை:

மிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1003 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதுபோல, இடைத்தேர்தல் நடைபெறும்  18 சட்டமன்ற தொதிகளுக்கு  389 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுடன்,  18 சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ந்தேதி தொடங்கி நேற்றுடன் (26ந்தேதி) முடிவடைந்தது.

இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக திமுக, அதிமுக கூட்டணி தவிர, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கி உள்ளதால்,  5 முனை போட்டி நிலவி வருகிறது.

ஏற்கனவே, முக்கிய கட்சிகள் வேட்புமனு தாக்கல்  செய்த நிலையில், இறுதி நாளான நேற்று அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பில் ஏராளமானோர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 1003 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஆண்கள் 880 பேர், பெண்கள் 121 பேர் மற்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

அதிகபட்சமாக சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் 39 ஆண்கள், 9 பெண்கள் என 48 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

குறைந்தபட்சமாக நீலகிரித் தொகுதியில் போட்டியிட 6 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக் கிறார்கள்.

திருவண்ணாமலைத் தொகுதியில் போட்டியிட 43 பேரும், பொள்ளாச்சி, கரூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தலா 41 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அதுபோல 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் 389 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  (27-ந்தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (28, 29-ந்தேதி) 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படு கிறது. மாற்று வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினம் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெறுவார்கள். 29-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை இதற்கான அவகாசம் உள்ளது.

29-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியாகும்.  அன்றைய தினமே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு  உரிய சின்னங்களும், மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.