டில்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால்,  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது  நிதிமந்திரி பொறுப்பு வகிக்கும்  பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்க செய்ய உள்ளார்.

ஏற்கனவே பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு, முத்தலாக் மசோதா, குடியுரிமை சட்ட திருத்த மசோதா போன்றவற்றால் பாராளுமன்ற அவைகள் அல்லோகலபட்டு வந்த நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இன்றுமுதல் வரும் 13-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்த பட்ஜெட்  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காலை 11 மணிக்கு உரை யாற்றுகிறார்.

அதையடுத்து நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மோடி அரசின் கடைசி பெட்ஜெட் என்பதாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் என்பதாலும், மத்தியஅரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என தககவல்கள் வெளியாகி உள்ளது.

நிதி மந்திரி பொறுப்பை கவனித்து வந்த அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்று, நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வருவதால்,   நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அதேவேளையில், கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக முக்கிய பிரச்சினை களை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம்  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சிகளை சபாநாயகர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்பிக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும்,  இன்றும் நாளையும் நடைபெறும் கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களை அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ளவேண்டும் நான் காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.