செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடும் நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 அமர்வுகள் மட்டுமே நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் குறித்து எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்ற போதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேவேளையில், பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு சரிந்து வருவதை கணக்கெடுப்பு மூலம் அறிந்த மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மேலும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.