டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ந்தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12ம் தேதி வரை நடைபெறும் என பாராளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. இந்த தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்காரணமாக, அவையை சமூகமாக நடத்தும் வகையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் வரும் 16ம் தேதி மாலை 4 மணிக்கு மக்களவை அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும், மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து வரும் 17 நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு  மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு  அழைப்பு விடுத்துள்ளார்.  துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான  வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்டு 10ம் தேதிமுடிகிறது. அவர் மாநிலங்களவை தலைவராக பங்கேற்கும் கடைசி கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.