Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது?

Sep 23, 2020

டெல்லி: பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடியும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்றுடன்  பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை  முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி (செப்டம்பர்) தொடங்கியது.  அதன்படி,  அக்டோபர் 1ஆம் தேதி வரை கூட்டத் தொடர்  நடைபெறும் என்றும்,  மக்களவை கூட்டத் தொடர் காலை 9 மணிக்கும், மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும் கூடி, விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும்,  விடுமுறை இல்லாமல், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அத்துடன் அவையில், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக, இரு அவைகளும் ஒங்கிணைக்கப்பட்டு அவை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மத்தியஅமைச்சர்கள்  நிதின் கட்காரி, பிரகலாத் படேல் உள்பட இதுவரை சுமார் 25க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  அத்துடன். அவர்கள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையில் பாதிப்புக்கு ஆளானார்கள். 16-ந் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பல்லி துர்காபிரசாத் ராவ் (திருப்பதி தொகுதி), கொரோனாவால் சென்னை ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

இந்த சூழ்நிலையில் தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரை, முன்கூட்டியே முடிப்பது குறித்து, அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் ஆலோசனை நடத்தியது. அதில் கூட்டத்தொடரை,  இன்றுடன்  முடித்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின்படி, புதன்கிழமையுடன் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும் என தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்றுடன் கூட்டம்  நிறைவுபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், சில முக்கிய சட்ட மசோதாக்கள் இன்று இரு அவைகளிலும் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post navigation

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க உச்சநீதிமன்றம் ஆணை..
டெல்லி அருகே ஆயிரம் ஏக்கர் பரப்பில்  பிரமாண்ட ‘பிலிம் சிட்டி’’

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer