டெல்லி அருகே ஆயிரம் ஏக்கர் பரப்பில்  பிரமாண்ட ‘பிலிம் சிட்டி’’

டெல்லி அருகே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திரைப்பட நகரை( பிலிம் சிட்டி) உருவாக்கும் முயற்சியில் உத்தரப்பிரதேச மாநில அரசு ஈடுபட்டுள்ளது…

அங்குள்ள கவுதமபுத்தர் நகரில் எக்ஸ்பிரஸ்வே பகுதியில், திரைப்பட நகரை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி நகரின் மையப்பகுதியில் இருந்து அரை மணி நேரத்தில், திரைப்பட நகரைச் சென்றடையலாம்.

மேலும் உலகத்தரத்துடன் அமையவிருக்கும், ஜேவார் விமானநிலையத்துக்கு மிக அருகே இந்த திரைப்பட நகர் உருவாகிறது.

தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா மற்றும் கிருஷ்ணர் அவதரித்த மதுரா ஆகிய நகரங்களும் , இந்த திரைப்பட நகரின் அருகாமையில் உள்ளன.

‘’இந்த திரைப்பட நகரம் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும்’’ என உ.பி. மாநில முதல்-அமைச்சர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத்,  அனுபம் கேர் உள்ளிட்ட இந்தி திரையுலக பிரமுகர்களுடன் காணொலி காட்சி மூலம்  நேற்று பிலிம் சிட்டியை அமைப்பது குறித்து , விளக்கமாக எடுத்துரைத்தார்.

-பா.பாரதி.