கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி (செப்டம்பர்) தொடங்கியது. அதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், மக்களவை கூட்டத் தொடர் காலை 9 மணிக்கும், மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும் கூடி, விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விடுமுறை இல்லாமல், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அத்துடன் அவையில், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக, இரு அவைகளும் ஒங்கிணைக்கப்பட்டு அவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்தியஅமைச்சர்கள் நிதின் கட்காரி, பிரகலாத் படேல் உள்பட இதுவரை சுமார் 25க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அத்துடன். அவர்கள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையில் பாதிப்புக்கு ஆளானார்கள். 16-ந் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பல்லி துர்காபிரசாத் ராவ் (திருப்பதி தொகுதி), கொரோனாவால் சென்னை ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.