தருமபுரி: காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால்,  அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்,  ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை
மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும்,  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால்,  காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 11ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக் கிறது. இதனால் ஒகனேக்கல் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி ஒகேனக்கலில்  அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஒகேனக்கல் அருவி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல, பல அருவிகளின் தொகுப்பாகும். ‘உகுநீர்க்கல்’ என்ற தமிழ்ச் சொல்லே மருவி ‘ஒகேனக்கல்’ என்றானது.ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள்  என நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.