ருத்துவர் ராமதாஸ், கடலூரில் தனது கட்சியினரிடையே பேசும் போது , ” உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதற்கு ஆள் இல்லை என்று என்னிடம் சொல்லி இருந்தால், நான் அந்தமானில் இருந்து ஒரு அம்பது பேரை இறக்குமதி செய்து இருப்பேன்… ” என்று கொஞ்சம் நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார்!

ஆனால், தனது கட்சியினர் மீது உள்ள ‘ விரக்தி’ யால் தான் இப்படி அந்தப் பேச்சு வெளிவந்திருக்கிறது என்பது வெளிப்படை!

ஒரு காலத்தில் தேர்தல்களில் நிற்பதற்கு’ நீ… நான்’ என்று போட்டியிட்ட பா. ம. க. வினர், இன்று ஓடி ஒளிவதற்குக் காரணமே… பெரிய மருத்துவர்..  சின்ன மருத்துவர். ஆகிய இருவரின் செயல்பாடுகள்தான் என்பதை அந்தக் கட்சியினர் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்!

2009 இலிருந்து அ. தி. மு. க., தி.. மு. க…. என்று மாறி மாறிக் கூட்டணி வைத்து, அதன் மூலம் ‘ பெரும் பொருளாதாரப் பலன்களை’ பா. ம. க. தலைமை அடைந்தது என்பதை, கடைசி பா. ம. க. தொண்டர் வரை அறிந்திருக்கிறார்கள்!

அதே நேரத்தில், தங்கள் சமுதாயத்துக்காக உயிர்த் தியாகம் செய்த தியாகிகளை மறந்தது…. வழக்கில் சிறை சென்ற லட்சம் ஏழை வன்னியர் களுக்கு எந்த உதவிகளும் செய்யாமல் கைவிட்டது போன்ற பா. ம. க. தலைமையின் அலட்சியமே இந்தப் பின்னடைவு என்பதும் ஊரறிந்த விஷயம் ஆகும்!

“இவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவே இந்த இயக்கத்தை நடத்துகிறார்கள்” என்ற எண்ணம் வன்னிய மக்களிடம் வலுப் பெற்றதாலேயே இந்தத் தொடர் தோல்வியை பா. ம.க.வுக்குத் தருகிறார்கள்!

இதனால் தான் மருத்துவர் ராமதாஸ் விரக்தியில் இப்படிப் பேசுகிறார் என்கிறார்கள் மக்கள்! ;

*** மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த போது, அவற்றைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தவர், அன்றைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி தான்!

ஆனால், இதை எதிர்த்து விவசாயிகள் வீறுகொண்டு எழுந்த போது, அதைக் கொச்சைப் படுத்திப் பேசிய வரும் எடப்பாடி தான்!

இன்றைக்கு விவசாயிகளின் ஓராண்டுக் கால தொடர் போராட்டத்தால், ” எங்கே விரைவில் வரவிருக்கும் உ. பி சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்து விடுமோ.. ” என்று அஞ்சி., திடீரென்று இந்தத் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்து இருக்கிறார்!

உடனே எடப்பாடி யும் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி பிரதமருக்கு நன்றி சொல்கிறார்!

மக்களோ எடப்பாடியின் ‘அடிமை அரசியலை’ நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்!

** ஓவியர் இரா. பாரி.