சென்னை:

டந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக பல இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் கடந்த 22ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில்,  போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோட்டில் இன்று பெற்றோர் கள் திரண்டு வந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெற்றோர்கள் தங்கள் குழந்தை களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

போராடும் ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் எங்களுக்கு வேண்டாம் என்றும், வேலை யில்லாமல் உள்ள பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும்  ஒரு தரப்பினர்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் பின்புலமாக இருந்து செயல்பட்டு வருவதாகவும் உடனே கல்விக்கூடங்களை திறந்து மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஆசிரியர்கள் போராட்டம் ஒருபுறமும், ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோர்களின் போராட்டம் ஒருபுறம் என்றும் தமிழகத்தில் போராட்டக்களம் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

பல இடங்களில் பள்ளி ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் ஒரு சில ஊர்களில், ஆசிரியைகளை ஊருக்குள் வர விடாமல் பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் புதிய ஆசிரியர்கள் வேண்டாம், பழைய ஆசிரியர்களையே மீண்டும் நியமிக்க கோரி 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.

கும்பகோணம் : நாச்சியார்கோவில் அருகே பள்ளி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.