சென்னை:
பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழகத்தில் பாரா மெடிக்கல் பட்டப்படிப்பு, மருந்தாளுனர்கள், டிப்ளமா நர்சிங், டிப்ளமா ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமா சான்றிதழ் படிப்புகளுக்கு, 121 அரசு மருத்துவ கல்லுாரிகளில் 2,526 இடங்கள் உள்ளன.

கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முறைகள் போன்ற விபரங்களை, tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.