பாராலிம்பிக் நிறைவு விழா: இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார் 'தங்கமகன்' மாரியப்பன்!

Must read

1para-2
பிரேசிலின் ரியோவில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் (பாராலிம்பிக்) நிறைவு விழாவில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி சென்றார் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன்.
ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் தமிழகத்தைச்சேர்ந்த  மாரியப்பன் இந்தியக்கொடியை ஏந்திச்சென்றார்.
உலகின் பெரும்பாலான நாடுகள் கலந்துகொண்ட இந்த போட்டி 780 மணி நேரம்  நடைபெற்றது. 22 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 4,300க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தற்போது வரை நடைபெற்று முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பில் தங்கவேலு மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கமும், தேவிந்திரா ஈட்டி எரிதலில் தங்கமும், மாலிக் தீபா குண்டு எரிதலில் வெள்ளியும், வருன்சிங்பாடி உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் என மொத்தம் தற்போது வரை 4 பதக்கங்களுடன், பாராஒலிம்பிக் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 43 வது இடம் பிடித்துள்ளது.
1para-3
முதல் மூன்று இடங்களில் 147 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தையும், இதற்கு அடுத்த படியாக கிரேட் பிரிட்டன் 75 பதக்கங்களுடனும், 72 பதக்கங்களுடன் உக்ரைன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
1968 ஆம் ஆண்டுகளில் இருந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கு பெற்று வரும் இந்தியா, இதுவரை 4 தங்க பதக்கம், 4 வெள்ளி பதக்கம், 4 வெண்கல பதக்கம் என மொத்தம் 12 பதக்கங்களை பெற்றுள்ளது.
பிரேசிலின் ரியோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதன் உயரம் தண்டுதலில் இந்தியாவின் 21 வயதான தங்கவேலு மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். இதையடுத்து பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை தங்கவேலு மாரியப்பன் ஏந்திச் செல்வார் என்று ஏற்கனவே இந்திய பாராலிம்பிக் சங்கம் அறிவித்திருந்தது.
இதன்படி பிரேசிலின் பாரம்பரிய மரக்கானா மைதானத்தில் நடந்த நிறைவு விழாவில் தங்கவேலு மாரியப்பன் கொடியேந்திச்சென்றார். தவிர, ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா போல பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவுவிழாவும் வண்ணவானவேடிக்கையுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.

More articles

Latest article