டெல்லி:  அந்தமான் – நிகோபரில் தீவுகளில்  பெயரிடப்படாமல் இருந்து வந்த  21 தீவுகளுக்கு தியாகம் செய்த வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி இன்று சூட்டி கவுரவித்தார்.

நாடு முழுவதும், இன்று  சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23, பராக்கிரம தினமாக மத்தியஅரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பராக்கிரம தினம் இன்று   டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் க காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு 21 வீரர்களின்  பெயர் சூட்டி வீரர்களை கவுரவித்துள்ளார்.

இந்த 21 தீவுகளில்  மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம்வீர் சக்ரா விருதை பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விக்ரம் பத்ரா, ராமசாமி பரமேஸ்வரன், மனோஜ்குமார் பாண்டே ஆகியோரின் பெயர்கள் தீவுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. சோம்நாத் தீவு, மனோஜ் பாண்டே தீவு, சேத்ரபால் தீவு, சஞ்சய் தீவு உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பல தசாப்தங்களாக, நாட்டின் திறன் குறைத்து மதிப்பிடப்பட்டது. ஆனால் இப்போது, இந்தியா நவீன வளர்ச்சியின் உச்சத்தைத் தொடும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் தீவுகள் உலகிற்கு நிறைய வழங்க முடியும். ஆனால் முன்னதாக இந்த சாத்தியம் அங்கீகரிக்கப்படவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அனைத்து 21 பரம்வீரர்களுக்கும் “இந்தியா முதலில்” மட்டுமே தீர்மானம்; இன்று இந்த தீவுகளின் பெயர்களில், அவர்களின் தீர்மானம் என்றென்றும் அழியாததாகிவிட்டது.

அந்தமானின் திறன் மிகப்பெரியது. கடந்த 8 ஆண்டுகளில், இந்த திசையில் நாடு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது: பிரதமர் மோடி முதன்முதலாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட பூமி இந்த அந்தமான் நிலம். சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் முதல்முறையாக உருவாக்கப்பட்டது. இன்று நேதாஜி சுபாஷ் போஸின் பிறந்தநாள். இந்த நாளை பராக்கிரம் திவாஸ் என நாடு கொண்டாடுகிறது என்று கூறினார்.