ஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது.

ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும். முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்திவந்துள்ளார்கள்.

ராம – ராவண யுத்தத்தில் ராவணன் தோல்வி அடையப்போகும் நிலையில், அவனைக் காப்பாற்ற மயில்ராவணன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகம் தடங்கல் இல்லாமல் முடிந்துவிட்டால், ராம லட்சுமணர்கள் அழிந்துவிடுவார்கள். எனவே, அவனுடைய யாகத்தைத் தடுத்து நிறுத்த ஆஞ்சநேயர் விரும்பினார்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்புரியும் தலங்களுள் தனிச்சிறப்பு மிக்கது, பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயில். ஆஞ்சநேயர் பஞ்சமுகங்களுடன் காட்சி தரும் ஆலயம் திண்டிவனம் – பாண்டிச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

36 அடி உயர பிரமாண்டத் திருமேனியுடன் அருள்புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இந்தத் தலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்துருக்கனன், பரதன் ஆகியோர் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீ ராமபிரானின் பாதுகையும் இந்தத் தலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்துச் செல்கிறார்கள்.

இந்த ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, மன அமைதி மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

மிகவும் வரப்பிரசாதியான பஞ்சமுக ஆஞ்சநேயர், வேண்டிய வரங்களை வேண்டியபடியே அருள்பவர். நம் துயரங்கள் யாவற்றையும் போக்கி அருள்புரிகிறவர்.