சென்னை:

மிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு விரைவில் உள்ளாட்சித்  தேர்தல் அறிவிக்கப்படும் என்று  மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்து வேற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி என்று, தாமதம் என பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில். மாநில தேர்தல்ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 77.46% மொத்த வாக்குகள் பதிவாகின. ஊரகப் பகுதிகளில் 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு லட்சம் பணியாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த தேர்தலில் 16,570 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும்,  பல்வேறு காரணங்களுக்காக 25 பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6ம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்பார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,   உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக எழுப்பிய புகார்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கப்பட்டது,  தேர்தல் ஆணையர்முன் எப்போதும் இல்லாத அளவு தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்ற‌து என்றும்,  100க்கு 100% உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்று முடிந்துள்ளது என்றார்.

வாக்காளர் குளறுபடி என்று கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தவர், வாக்காளர் பட்டியல் நாங்கள் தயாரிப்பது கிடையாது, அது   இந்திய தேர்தல் ஆணையத்தினி வேலை என்றார்.

மீதமுள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு,  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.