சென்னை,

வருமான வரித் தாக்கல் மற்றும் பான் கார்டு பெறுவது ஆகியவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது.

வரி செலுத்த, பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது. இதற்கான திருத்த‌ மசோதாவை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார்.

வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வருமான வரி தாக்கலின்போது ஆதார் எண் கட்டாயம் என மசோதாவில் தெரி‌விக்கப்பட்டுள்ளது.

பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியது இந்த மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.