டெல்லி: பான் கார்டுடன் ஆதாருடன் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கியுள்ள மத்தியஅரசு அத்துடன் சில கண்டிஷன்களையும் போட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் இணைக்காதவர்கள் பின்னர் இணைக்க முயற்சித்தால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் இன்று ஆதார் கார்டு இணைக்க மேலும் ஒரு வருடம் அவகாசம் சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி,   நாளை முதல் (ஏப்ரல் 1ந்தேதி  2022) அடுத்த மூன்று மாதங்களுக்கு பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.

மூன்று மாதங்களுக்கு பின்னர், பான் ஆதார் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச்.31 2023க்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2023 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.