சென்னை:
பிரதமரின் ஜி20 கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்து கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி-20 ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே முதல் நபராக அறிவித்தார்.
நாளை 5-ம்  தேதி காலை டெல்லி சென்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவே அவர் சென்னை திரும்ப உள்ளார். டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 ஜி-20 மாநாடு அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியானாலும், மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டு உள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பிரதமரின் ஜி – 20 கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.