திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி (முருகன்)திருக்கோயிலில் அரோகரா முழக்கம் விண்ணை பிளக்கும் வகையில் வேத விற்பன்னர்கள் தமிழில் மந்திரம் குடமுழுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலில் கடந்த 2006ம் ஆண்டுக்கு பிறக இதுவரை குடமுழுக்கு நடைபெறாத நிலையில், இன்று கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது. இதந்பாக பணிகள்,. 2019ல் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தத. கடந்த ஒரு வருடங்களாக பணிகள் சூடுபிடிக்க இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக திருவிழாவை ஒட்டி கடந்த 18ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. 23ஆம் தேதி முதல் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உப சன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்ற பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இன்று எம்பெருமான் முருகனுக்கு கும்பாபிஷேசகம் நடைபெற்றது.
வேத விற்பன்னர்கள் தமிழில் மந்திரங்கள் ஒத கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . அப்போரு கருடன்கள் வானத்தில் வட்டமிட்டன.
முன்னதாக இன்று காலை 4.30 மணிக்கு 8ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் பல்வேறு வகை பொருட்கள் மூலிகைகளால் சிறப்பு யாக தீபாரதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து திருமுறை ,கந்தபுராணம், கட்டியம், திருப்புகழ் பாடப்பட்டது. யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடைபெற்ற நிலையில் வாத்திய இசை முழங்க ராஜகோபுரம் தங்க விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கங்கை, காவிரி, சண்முக நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் கலசங்கள் மீது ஊற்றப்பட்டன. குடமுழுக்கு நன்னீரை பக்தர்கள் மீது தெளிக்க8 இடங்களில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் மற்றும் தங்க விமானம் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. கும்பாபிஷேக திருவிழாவை பல லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் என பலரும் பங்கேற்றனர். கலசங்களுக்கு புனித நீர் ஊற்றிய போது விமானம் மூலம் கோபுரம் மீது மலர் தூவப்பட்டது. அதேபோல் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்க 8 இடங்களில் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் கும்பாபிஷேகம் விழாவை காண வசதியாக மலை அடிவாரம் தொடங்கி பேருந்து நிலையம் வரை 16 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டது.இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் காலை 11 மணி முதல் வழக்கம்போல பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பழனி நகரம் முழுவதும் 300 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதோடு ஹெலிகேம் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பழனி பேருந்து நிலையத்திற்கு புறநகர் பேருந்துகள் வரை தடை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் பழனிக்குள் இயக்கப்படுகிறது.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து கார்களில் பழனி வரக்கூடிய பக்தர்களுக்கு கொடைக்கானல் பைபாஸ் பிரிவு, கோவில் சுற்றுலா பஸ்நிலையம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை பகுதியில் இருந்து பழனி வரும் கார்கள், சண்முகநதி பைபாஸ், பாலசமுத்திரம் சந்திப்பு வழியே கோசாலை பார்க்கிங் மற்றும் கார்த்தி பள்ளி வளாகத்தில் வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.