சென்னை:
மிழ் நாட்டில் நான்கு இடங்களில், ஒலிம்பிக் அகாடமி அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியிருந்தார்.

மேலும், கிராமபுற விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலாக போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில், ஒலிம்பிக் அகாடமி அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குடியரசு தின விழா நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் குறியிடப்பட்டுள்ளது.