சென்னை:

பிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராபர்ட் ராஜசேகர் இன்று திடீரென காலமானார். சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் போரூரில்உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர்து உயிர் பரிந்தது.

பிரபல இரட்டை இயக்குனர்கள் ராபர்ட் – ராஜசேகர். இவர்கள் இயக்கியப் படம் பாலைவனச்சோலை வெற்றிபடமான துடன் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.

இவரின் முதல்படம் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’. இந்த படத்தில் உள்ள  கதாநாயகர்களில் ராஜசேகரும் ஒருவர்.

ராபர்ட் ராஜசேகர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கிய வெற்றிப்படங்கள்,  ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘தூரம் அதிகமில்லை’, ‘பறவைகள் பலவிதம்’, ‘தூரத்துப் பச்சை’, ‘கல்யாணக் காலம்’ போன்ற வெற்றிப்படங்கள்.