இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்காரன் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று பாராளுமன்ற கூடிய நிலையில், பல்வேறு சலசலப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதுடன், இன்று இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவு கொடுத்து வந்த இரு கட்சிகள், ஆதரவை விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி கூட்டணிக்கு சென்று விட்டதால், அவரது ஆட்சி பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் அவரது ஆட்சிக்கு  எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் சபாநாயகர் அவையை ஒத்தி வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து இம்ரான்கான் பரிந்துரையால் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது.

இந்த விசாரணை முடிவில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து 9ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி இன்று பாகிஸ்தான்  நாடாளுமன்றம் இன்று கூடியது.  காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்த நிலையில், பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவு எம்பிக்கள் வரவில்லை என கூறப்பட்டது.  ஆனால், இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் அவைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், இம்ரான்கான் இல்லாத நிலையில் வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து,  சபாநாயகர் பாராளுமன்றத்தை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து பிற்பகல் மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தயாராக உள்ளனர். ஆனால் பிரதமர் இம்ரான்கான் எப்போது வருவார் என தெரியாத நிலையில், நாடாளுமன்றத்தில் 8 மணிக்கு மேல்  நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயங்கி, வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறார் என்றும், இது நீதிமன்ற அவமதிப்பு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.