பாகிஸ்தான்: மூத்த மனித உரிமை வழக்கறிஞர் அஸ்மா ஜஹாங்கீர் மரணம்

லாகூர்:

பாகிஸ்தான் மனித உரிமை நல ஆர்வலரும், மூத்த வக்கீலுமான அஸ்மா ஜஹாங்கீர் (வயது 66) மரணமடைந்தார். அவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

லாகூரில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு குறித்த விபரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இயற்கையான அவரது வெளிப்படை பேச்சு மற்றும் மனித உரிமைகள் மீதான இடைவிடாத நோக்கம் ஆகியவற்றுக்காக பாகிஸ்தானில் பேசப்பட்டவர். எதையும் எதிர்த்து செயல்படும் போராட்ட குணம் கொண்டவர்.

இவரது மறைவுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் மற்றும் இதர உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags: pakistan: human rights senior lawyer Asma Jahangir passes away in Lahore, பாகிஸ்தான்: மூத்த மனித உரிமை வழக்கறிஞர் அஸ்மா ஜஹாங்கீர் மரணம்