மீண்டும் சீண்டும் பாக்.: இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து ஐந்தாவது தாக்குதல்!

Must read

டில்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படை தாக்கி அழைத்ததை அடுத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் கடந்த இரு நாட்களுக்குள் ஐந்தாவது முறையாக இந்திய நிலைகளை குறிவைத்து தாக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
download-2
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள யூரி ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியானார்கள்.  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர், பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து தாக்குல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக இந்திய ராணுவம் அறிவித்தது.
இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான், எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதற்கு மாறாக காஷ்மீரின் அக்னூர் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுவிய பாகிஸ்தான் படைகள், இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளன.
கடந்த 48 மணி நேரத்தில், பாக்., படைகள் நடத்திய ஐந்தாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருவதாக மத்தி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More articles

Latest article