ஸ்லாமாபாத்

பாக் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் பாக் நாளேடு ஒன்று, “காஷ்மீர் எந்த நாட்டுடன் இணையும் என்பதை காஷ்மீரின் பிரதமர் விரைவில் அறிவிப்பார்” என விஷமத்தனமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பாக் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தெரிந்ததே.  அதற்கு அடுத்த நாளே, பாக் நாட்டின் உருது செய்திதாளான டெய்லி ஜங்க் என்னும் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.  அதில், ”சுதந்திர காஷ்மீர் விரைவில் தங்கள் இணைய விரும்புவது எந்த நாட்டுடன் என்பதை தெரிவிக்கும்” என்ற தலைப்பில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.  செய்தியில், ”நவாஸ் ஷெரிஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டது கிளர்ச்சியை உண்டாக்கும் என பலுசிஸ்தான் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்..  இனி எந்த நாட்டுடன் நாங்கள் இணைவோம் என்பதை விரைவில் அறிவிப்போம் என சுதந்திர காஷ்மீரின் பிரதமர் கூறினார்” என உள்ளது.

பாக் நாளேடுகள் தொடர்ந்து “காஷ்மீர் பிரதமர்” என்றே விஷமத்தனமாக குறிப்பிட்டு வருவது தெரிந்ததே.

உண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பலுசிஸ்தான் தலைவர் ஹைதர் தங்களால் இனியும் பாகிஸ்தானை ஆதரிக்க முடியாது என்றும், இந்தியாவுடன் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார்.  இதை திருத்தி அந்த நாளேடு அவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைதர் பேசியதின் வீடியோ க்ளிப்பிங்க் ஒன்றை அந்த நாளேட்டின் வாசகர் ஒருவரும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஹைதர் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை வன்மையாக கண்டித்துள்ளார்.

இதற்கிடையில் பலுசிஸ்தானில் நடக்கும் மனித உரிமை மீறல்களை குறித்து இந்தியா புகார் எழுப்பியுள்ளது.