இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் இந்தியா ஊடகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தான் ராணுவம் குறித்து விமர்சனம் செய்ததால், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு ஆளானார்.  ஆனால், அவர்களிடம் இருந்து தப்பித்து விட்டார்.

இந்திய ஊடகமான வியான் என்ற செய்தி சேனலின் பாகிஸ்தான் நாட்டின் நிர்வாகியாக இருந்து வருபவர் தாஹா சித்திக்.  இந்திய  WION-ன் தொலைக்காட்சி சேனல் பாகிஸ்தானிய பீரோவின் தலைமை அதிகாரியாக உள்ளார்.

இவர் சமீபத்தில் ஊடகங்களில் பாகிஸ்தான் ராணுவம் குறித்து கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் ராவல்பின்டி விமான நிலையத்திற்கு சென்றபோது, அடையாளம் தெரியாத விஷமிகளால் தாக்ககப்பட்டதாகவும், அவரை அவர்கள் கடத்த முயற்சித்தபோது, அவர்களிடம் சித்திக் தப்பித்து விட்டதாகவும் கூறப்படுகிது.

பாகிஸ்தான் ராணுவம் குறித்து விமர்சனம் செய்ததற்காக தாகா சித்திக் ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சித்திக் பிரான்ஸ் 24 க்கு புகார் அளித்துள்ளார்.அதில், பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைப்பின் தைரியமான விமர்சனங்களை வெளியிட்டதற்காக தான்,  அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகவும் புகார் கூறி உள்ளார்.

சித்திக் தாக்கப்பட்டதற்கு மனித உரிமைகள் மற்றும் ஊடகவியலாளர்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.

ராவல்பிண்டி இஸ்லாமாபாத் பத்திரிகையாளர்கள் சங்கம், பாகிஸ்தான் உள்துறை மந்திரி அஹ்ஸான் இக்பாலை சந்தித்து,  ஒரு மூத்த பத்திரிகையாளர் கடத்த முயன்ற சம்பவத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக் விடுத்துள்ளது.

தாஹா சித்திக் கடந்த 2014ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ஊடகவியலாருக்கான  உயர்ந்த விருதான ஆல்பர்ட் லான்டர்ஸ் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பாகிஸ்தான் பத்திரிகையாளரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.