டில்லி:

த்மாவத் படத்திற்கு எதிராக போராடிவரும் கர்னி சேனா அமைப்பின் குண்டர்கள், குழந்தைகள் பயணித்த  பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

பத்மாவத் படத்திற்கு நிலவியை தடையை  உச்சநீதிமன்றம் நீக்கியதை அடுத்து, வடமாநிலங்களில் போராட்டம் சில அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   திரையரங்குகள் மீது தாக்குதல், சாலை மறியல் வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்களை இவர்கள் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற வன்முறைச் சம்பவங்களில் கர்னி சேனா அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் குர்கானில் ஜிடி கோயங்கா பள்ளியின் பேருந்து மீது கர்னி சேனா குண்டர்கள் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இந்த பேருந்தில் ஐந்து  வயது குழந்தைகளை ஏற்றிச் செல்லப்பட்டனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  பள்ளி பேருந்து மீது குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பள்ளி குழந்தைகள் பயந்து போய் கீழே அமர்ந்து அழும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளன.

குழந்தைகளை சிரியைகள் சமாதானம் செய்யும் காட்சியும், பேருந்து வேகமாக இயக்கப்படும்காட்சியும், பேருந்தின் கண்ணாடி ஜன்னல்கள் கல்லடி பட்டு விழும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.

குண்டர்களின் இந்த கொடூர செயலுக்கு நெட்டிசன்கள் பலரும், சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.