சென்னை: 

ணிரத்னம் அடுத்து தயாரிக்க உள்ள படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. சிம்பு, விஜய் சேதுபதி, பஹத்பாசில், அரவிந்த்சாமி என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது. இந்நிலையில், இந்தபடத்தில் அதிதி ராவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே அதிதிராவ் மணி ரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது புதிய படத்துக்கும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பசில், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோரும் நடிக்க ஒப்ந்தமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்., பிரபல ஒளிப்பிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார்.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிதி ராவ் சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியின் மனைவியாக  நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிதிராவ், தற்போது விஷால் பரத்வாஜின் படத்திலும், தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.