சென்னை: தமிழ்நாடு அரசு இன்றுதாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில், நெல் ஆதரவு விலை உயர்வு, பனை மேம்பாட்டு இயக்கம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.4508.23 கோடி மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, நெல் ஆதரவு விலை ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு ரூ.70ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் ரூ.2060ஆகவும், சாதாரண ரகம் ரூ.2015ஆகவும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல் ஆதரவு விலை – ஒரு குவிண்டால் சாதாரண ரகத்திற்கு ரூ.50ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.4508.23 கோடி மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனை மேம்பாட்டு இயக்கம் -ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்படி, 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனைவிதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் விநியோகம் செய்யப்படும். தமிழகத்தில் பனைமரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிறுதானிய இயக்கம் – ரூ.12.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்றவற்றை 61ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
பயறு வகைகளை கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதுபோல மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் பயறு வகைகள் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேளாண்மையில் சிறப்பாக பணியாற்றும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்காக ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பலன் தரும் பயறு உற்பத்தி திட்டத்திற்காக ரூ.45.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்றவற்றை 61ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய திட்டம்.
மழை குறைவான பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி பயிற்சி, சந்தைப்படுத்த வசதிகள் செய்யப்படும்
‘ஏற்றம் தரும் எண்ணெய் வித்துகள் திட்டம் – ரூ.25.13 கோடி ஒதுக்கீடு‘
‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம் – ரூ.16 கோடி ஒதுக்கீடு‘
சீர்மிகு தென்னை சாகுபடி திட்டத்திற்கு ரூ.10.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்க 17 லட்சம் தென்னங்கன்றுகள் விநியோகம் செய்ய திட்டம்.
அண்ணா பண்ணை மேம்பாடு திட்டத்துக்கு ரூ.21.80 கோடி ஒதுக்கீடு
கூட்டுப்பண்ணைத் திட்டம் – ரூ.59.50 கோடி செலவில் நிறைவேற்றப்படும். 1 லட்சம் விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படும்.
அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் – ரூ.59.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.2 கோடியில் சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
வேளாண் பணிகளை எளிதாக்க 50 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி செய்யப்படும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2327 கோடி ஒதுக்கீடு
கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகையாக சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.42.50 வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும்.
கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும். ஊக்கத் தொகையால் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள்.
சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெற ரூ.138.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், விவசாயிகள் புதிய வகை கரும்பு வகைகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்க ரூ.2கோடி ஒதுக்கப்படுவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.