சென்னை: சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் சார்ந்த  முக்கிய தகவல்களும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், உழவர் சந்தை, காய்கறி தோட்டம், பழச்செடி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 273 பக்க அளவிலான வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு தனிபிரிவு உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 வேளாண்மையின் பெருமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள சென்னையில் மரபுசார் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ‘சிறுதானிய இயக்கம்’  செயல்படுத்தப்படும்.

விவசாயிகள், பயிறு வகைகளை வரப்புகளில் வளர்க்கவும், ஊடுபயிராக வளர்க்கவும் மானியம் அளித்து ஊக்கப்படுத்தப்படும்.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும். இத்திட்டம் ரூ.45 கோடி ஒன்றிய – மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப் படும்.

அறுவடைக்கு பிறகான இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்க ரூ.52.02 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்

அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம்

காய்கறிகளை குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டர் பரப்பில் காய்கறி பயிரிட மானியம்

 ரூ.29.12 கோடி செலவில் மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன் பல்வகை பழச்செடிகள் திட்டம் செயல்படுத்தப்படும். பழப்பயிர் சாகுபடி பரப்பை 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்த 80 லட்சம் பல்வகை பழச்செடிகள் திட்டம் தீட்டபபட்டுள்ளது.

 முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.  பொதுமக்கள் சத்தான காய்கறிகளை தங்கள் வீடுகளிலேயே விளைவிக்க உதவி செய்யப்படும். இதற்காக  ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, கிராமப்பகுதிகளில் 2 லட்சம் விதைத் தளைகள் மானியத்தில் விநியோகம் செய்யவும்,  காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக எக்டேருக்கு ரூ.15ஆயிரம் அல்லது இடுபொருட்கள் வழங்கப்படும்/ நகர்பகுதிகளில் 1 லட்சம் மாடித் தோட்டத் தளைகள் மானியத்தில் விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2 லட்சம் குடும்பங்களுக்கு 16 லட்சம் மூலிகைச்செடிகள் வழங்கும் திட்டம் – ரூ.2.18 கோடி நிதி

தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள் திட்டத்திற்கு ரூ.12.50 கோடி நிதி</p>

>கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் – ரூ.5 கோடி நிதி

982.48 கோடி ரூபாய் செலவில் 1.50 லட்சம் ஹெக்டர் பரப்பில் சிக்கன நீர்பாசன திட்டம்

ரூ.1 கோடி செலவில் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்

விவசாயிகளுக்கு 7106 வேளாண் எந்திரங்கள் வழங்க மற்றும் 193 வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க ரூ.140 கோடி

விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க வேளாண் இயந்திரங்கள் ரூ.23 கோடியில் கொள்முதல் செய்யப்படும்

முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் – ரூ.114.68 கோடி ஒதுக்கப்படும்

மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் திட்டம் – விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் மானியம்

உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பாண்டில் ரூ.6 கோடி செலவில் 10 உழவர் சந்தைகள் புதியதாக அமைக்கப்படும், உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை செய்து காய்கறி கழிவு உரம் தயாரிக்கப்படும். 

வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடத்தில் 40 விளை பொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை வெளியிடப்படும்

ரூ.10 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு அருகே சேமிப்பு வசதியுடன் விற்பனை நிலையம் அமைக்கப்படும்

ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ.10 கோடியில் காய்கறிகள், பழங்களுக்கான குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்

30 நடமாடும் காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற இளைஞர்களுக்கு ரூ.2லட்சம் வரை மானியம்

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ரூ.50 லட்சம் செலவில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம்

நீலகிரியில் ரூ.2 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை வளாகம்

>முருங்கை விவசாயிகளுக்கு என்று சிறப்பு ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும்

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.