நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை பா.இரஞ்சித் இயக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து கூறினார் ரஞ்சித். அப்போது அவர் சொன்ன ஐடியா கமலுக்குப் பிடித்திருந்ததாகவும், அதை டெவலப் செய்ய கூறியதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியன் 2, மகேஷ் நாராயணன் படங்கள் முடிந்த பின் ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்கலாம் என்கிறார்கள்.

வெற்றிமாறன் கமலை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.