தயாரிப்பாளராக களமிறங்கும் மூன்றாவது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் பா. ரஞ்சித்.

ரைட்டர் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில், லீட் ரோலில் நடிக்கிறார் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி. Little Red Car Films மற்றும் Golden Ration Films உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இப்படத்தை எழுதி, இயக்க இருப்பவர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்.

ப்ரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார் எனவும், இசை கோவிந்த் வசந்தா, எடிட்டிங்கை மணி கையாள்கிறார் என தெரியவந்துள்ளது.