சென்னை
பாஜக அரசு வருமானவரித்துறை மூலம் காங்கிரஸை முடக்க சதி செய்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 204*18 நிதி ஆண்டு முதல் 2020-21 நிதி ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
இதற்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்,
”அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை. 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?.பாஜக அரசு 139 ஆண்டுக்கால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்கச் சதி நடக்கிறது”.
எனக் கூறியுள்ளார்
[youtube-feed feed=1]