காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம்  காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தேவைப்படும் மருத்துவமனைகள், தனி நபர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்தது. அதன்படி, அந்நிறுவனத்துடன்  விருதுநகர் AKPS மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது.

விருதுநகரில் அமைந்துள்ளது  பிரபல மருத்துவமனையாபன  AKPS மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கொரோனா ( COVID 19) நோயாளிகளுக்கு சிறப்பான வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிக்க , காரைக்குடி அருகில் உள்ள GULF ENGINEERING நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி GULF ENGINEERING , நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் OXYGEN உற்பத்தி செய்யும் இயந்திரத்திற்கான ஒப்பந்தத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து கூறிய  GULF இன்ஜினியரிங் நிறுவனத்துக்கான மக்கள் தொடர்பு – துணை தலைவர் மீனா, இந்த ஒப்பந்தம் எட்டு வாரங்களுக்குள்ளாக PSA தொழில்நுட்பத்துடன் OXYGEN உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நிறுவவேண்டும். இருபது அடி பெட்டகத்தில் இருக்கும் படியான இந்த இயந்திரம் மருத்துவமனை மாடியில் நிறுவப்படும். அனைத்து கால சூழ்நிலைக்கும் தாங்கும் விதமாக வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த இயந்திரத்துடன் சிலிண்டர்-கல் நிரப்பும் நிலையத்தையும் நான்கு மாத காலத்தில் நிறுவவேண்டும். இதன் மூலம், 150 bar அழுத்தத்தில் சிலண்டர்கள் நிரப்பி விநியோகிக்க முடியும். இந்த ஒப்பந்தத்துடன் ஓராண்டுகால பராமரிப்பு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி வளங்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வழங்குகிறது. இத்திட்டம் தமிழக அரசின் oxygen உற்பத்தி துறைக்கான 30 % மானியத்திற்கும் விண்ணப்பித்துள்ளது.

இந்த திட்ட ஒப்பந்தம், தமிழத்திலேயே oxygen உற்பத்தி செய்யும் இயந்திரங்களை வடிவமைத்து தமிழகத்தின் தேவையை பூர்த்திசெய்ய முடியும் என்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும்  என்று நம்பிக்கை தெரிவித்ததுடன்,  இது அனைத்து தனியார் சிறு மருத்துவமனைக்கான பெரும் தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இந்த இயந்திரத்தின் வணிக விவரங்களுக்கு 82708 90371 மற்றும் 99430 13490 தொடர்புகொள்ளவும்.இணையத்தளம் : www.gulfengineering.in ; மின்னஞ்சல்: info@gulfengineering.in