நுட்பமான நிபுணர்களே, புலவாமாவில் கோட்டை விட்டது ஏன்? – ஓவைஸி விளாசல்

Must read

ஐதராபாத்: புலவாமா தாக்குதல் நடந்தபோது, பிரதமர் நரேந்திரமோடி, மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுவிட்டு, தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளார் தெலுங்கானாவின் பிரபல அரசியல்வாதி அசாதுதீன் ஓவைஸி.

இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, “பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை குண்டுகளை வீசியது. இந்த விவகாரத்தில், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, 250 பேர் கொல்லப்பட்டனர் என்றுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரோ, அந்த இடத்தில் 300 மொபைல் ஃபோன்களின் செயல்பாடு கண்டறியப்பட்டதாக கூறுகிறார். அந்த இடத்தில் 300 ஃபோன்கள் செயல்பட்டு வந்ததை துல்லியமாக கணிக்கத் தெரிந்த உங்களால், புலவாமாவில் 50 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து கொண்டுவரப்பட்டதை எப்படி கண்டுபிடிக்க முடியாமல் போனது?

எனவே, பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் நான் கேட்க விரும்புவது என்னவெனில், அந்த நேரத்தில், நீங்கள் இருவரும் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுவிட்டு, தூங்கிக் கொண்டிருந்தார்களா?” என்றுதான். இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார் ஓவைஸி.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article