டில்லி:

யதை காரணம் காட்டி, பாஜக மூத்த தலைவரும் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவரும், பமுன்னாள் துணை பிரதமருமான  எல்.கே.அத்வானியை பாஜக தலைமை ஓரங்கட்டி உள்ளது.

அத்வானி போட்டியிட்டு வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் கருத்து கேட்காமலேயே பாஜக தலைமை, தனது தொகுதியை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிடுங்கியது, அத்வானியை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதா கவும், அவர் மோடி, அமித்ஷா மீது கடுமையான கோபத்தல் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அத்வானியிடம் இருந்து காந்திநகர் தொகுதி பறிக்கப்பட்டதற்கு, அந்த தொகுதியை சேர்ந்த பாஜக தொண்டர்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். இதன் காரணமாக அமித்ஷாவின் வெற்றியும் கேள்விக்குறியாகி உள்ளது.  பாரதிய ஜனதா கட்சியில் அத்வானியின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வரவே மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர் என்று பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்….

தற்போது 91 வயதாகும் அத்வானி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில், துணைப் பிரதமராகவும், பா.ஜ கட்சியில் முக்கிய தலைவராகவும் இருந்து வந்தார்.  பா.ஜ கட்சியில் 75 வயதை கடந்த  தலைவர்கள் 10க்கும் மேற்பட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் விதமாக, அவர்களின் அரசியல் வாழ்வுக்கு வயது 75 என நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விதியை கடுமையாக பின்பற்றி, மூத்த அரசியல் தலைவர்களை தற்போதைய பாஜக தலைமை அநாதையாக்கி வருகிறது. ஏற்கனவே மூத்த தலைவர்களான மறைந்த வாஜ்பாய், யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி போன்றோர்கள் ஓரங்கப்பட்டு உள்ளனர். அதுபோல அத்வானியையும் ஒருங்கட்டி வந்தனர். ஆனால், அவருக்கு கட்சியில் உள்ள செல்வாக்கு காரணமாக அவரை முழுவதுமாக ஒதுக்க முடியாமல் மோடி, அமித்ஷா தலைமை தவித்து வந்தது.

இந்த நிலையில், தற்போது பாராளுமன்ற தேர்தலை காரணம்காட்டி, 1991ம் ஆண்டு முதல் தற்போது வரை 7 முறை காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி வாகை சூடி வந்த அத்வானிக்கு போட்டியிட சீட் மறுக்கப்பட்டு ஓரக்கப்பட்டு உள்ளார்.

எற்கனவே குஜராத் கோத்ரா கலவரத்தை தொடர்ந்து மோடி மீது அதிருப்தி கொண்ட அத்வானி, கடந்த லோக்சபா தேர்தல் சமையத்தில், பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திர மோடியை  முன்நிறுத்த வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால், அது பயனளிக்காத நிலையில், மோடி பிரதரானதால் மூத்த தலைவர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மோடி பிரதமரானதும்,  அத்வானிக்கு முதல் அடி விழுந்தது. அவர் பாஜக ஆலோசனைக் குழுவுக்கு மாற்றப்பட்டார்.  அவருடன் மூத்த தலைவர்கள்  அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷியும் இணைந்தனர். ஆனால், இந்த ஆலோசனை குழுவிடம் ஆலோசனை பெறாம லேயே கட்சியின் நிர்வாக செயல்கள் நடைபெற்று வந்தன. இது ஆலோசனை குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து  பா.ஜ கட்சி நிறுவன நாள் நிகழ்ச்சியிலும் அத்வானி உள்பட மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டானர்.

இதன் காரணமகா பல மூத்த தலைவர்கள் பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்த நிலையில், அவர்கள் கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டனர். ஆனால் அத்வானி பொறுமை காந்து வந்தார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில், அத்வானிக்கு மீண்டும் காந்திநகர் தொகுதி ஒதுக்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்காமல், அவரது தொகுதியை அமித்ஷா பறித்துக்கொண்டார்.

இதற்கிடையில்,   பா.ஜ.வின் வயதான தலைவர்களை, பா.ஜ பொதுச் செயலாளர் ராம்லால் தொடர்புக் கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவிக்கும்படி கூறினார். ஆனால் அதற்கு அத்வானி மறுக்கவே, அவரது தொகுதியில் அமித்ஷா போட்டியிடு வதாக அறிவிக்கப்பட்டது. இது காந்திநகர் பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்வானியை திட்டமிட்டே மோடியும், அமித்ஷாவும் அவமரியாதை செய்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். அத்வானிக்கு தொகுதி ஒதுக்க மறுத்த விஷயத்தில், அவரை நேரில் சந்தித்து பேசியிருக்கலாம்.. அதைவிட்டு, அவரிடம் எந்தவித கருத்தும் கேட்காமல், அவரது தொகுதி பறிக்கப்பட்ட  விதம்  தவறு என்றும், இதை அத்வானி அவமரியாதையாக கருதுகிறார் என்று தெரிவித்து உள்ளனர்.

அத்வானி ஒதுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் பாஜக துணைத்தலைவர் உமாபாரதியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உமாபாரதி, மோடி இன்று  பிரதமர் பதவியில் இருக்கும் அளவுக்கு கட்சியை மேம்படுத்தியதிலும், ஆரம்பக் காலத்தில் இருந்தே முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவர் அத்வானி என்று கூறியவர், பாராளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானி யின் தொகுதி அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக அவர்தான் விளக்கம் அளிக்க வேண் டும் என உமா பாரதி தெரிவித்துள்ளார்.

ஆனால், தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்விதமான பெரிய  பதவியையும் எதிர்பார்த்ததில்லை. தேர்தலில் போட்டியிடுவதாலோ, போட்டியிடாமல் போவதாலோ அவரது தகுதியில் ஏற்ற, இறக்கமும் ஏற்பட்டுவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளை காணும்போது,  அத்வானியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

ஆனால், அத்வானியில் தீவிர விசுவாசிகள் பாஜக தலைமையின் போக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தாக்கல் காந்திநகர் தொகுதியில் எதிரொலிக்குமா என்பது பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்..