அரசியல், தலித் மற்றும் சாதி தொடர்பான கருத்துக்களை இயக்குநர் பா.ரஞ்சித், தொடர்ந்து பேசி வருகிறார். பலமுறை இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “மன்னர் ராஜராஜ சோழன் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்த நிலத்தை அபகரித்தார். அவரது ஆட்சியிலிருந்து தான் ஜாதி கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி” என்றெல்லாம் பேசியிருந்தார்.

இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. அவரின் பேசுக்கு எதிராகவும், ஆதராகவும் சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்கும் இவர் மீது பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ரஞ்சித்திற்கு கிளம்பிய எதிர்ப்பு,கருத்துரிமைக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பாக பார்க்கப்பட்டது . எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 310 க்கும் மேற்பட்டவர்கள் ரஞ்சித்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். முன்னூறுக்கும் மேற்பட்ட போராளிகள் ரஞ்சித்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.