விஜய் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கி வரும் படம் ‘விஜய் 63’ . இப்படத்தை அர்ச்சனா கல்பாதி தயாரித்து வருகிறார் .

படப்பிடிப்பு தொடங்கி ஐந்து மாதங்கள் ஆகியும் தயாரிப்பாளர் என்ற முறையில் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்ததால் விஜய் ரசிகர்கள் அர்ச்சனாவை அப்டேட் தரமுடியுமா? முடியாதா? என செல்லமாக மிரட்ட தொடங்கிவிட்டனர்

ரசிகர்களின் அன்புக்கட்டளைக்கிணங்க அர்ச்சனா கல்பாதி, ‘தளபதி 63′ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அனேகமாக இன்றைய அப்டேட்டில் தளபதி 63’ டைட்டில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.