டில்லி,

ங்களிடம் உள்ள பழைய 96,500 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர கோரி, அனாதை உடன்பிறப்பு கள் பிரதமருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், தங்களது பெற்றோர்கள் இறந்துவிட்டதால், அவர்கள் சேமித்து வைத்திருந்த  96500 பழைய நோட்டுக்களை மாற்றி தர உதவும்படி பிரதமர் மோடிக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய் இறந்ததால், அனாதையான குழந்தைகள், தங்களது அம்மா பெட்டியில் பூட்டி வைத்திருந்த 96,500 மதிப்புள்ள பழைய நோட்டுக்களை மாற்றி தர உதவும்படி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் கோடா பகுதியை சேர்ந்த உடன்பிறப்புகளான 16 வயது சகோதரனும், 12வயது சகோதரியும், தங்களது பெற்றோர் மறைந்து விட்டால், அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை மாற்றி தர உதவும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அந்த சிறுவன் கூறிய தாவது,

தங்களது தந்தைவழி சொந்த வீடு ஒன்று சரத்வாடா கிராமத்தில் இருந்ததும் என்றும், அங்குள்ள ஒரு பெட்டியில் இந்த பணம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தற்போதுதான் தெரிய வந்ததாகவும், இதை மாற்றித்தர ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டதாகவும், ஆகவே இந்த பணத்தை மாற்றித்தர பிரதமர் உதவும்படியும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறி உள்ளார்.

இந்த அனாதை சகோதர சகோதரிகள் குறித்து, ராஜஸ்தான் மாநில குழந்தைகள் நலக்குழுவுக்கு தெரிய வந்ததின்பேரில், அவர்களின் முயற்சி காரணமாகவே இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, குழந்தைகள் நலக்குழு சேர்மன் ஹரிஷ் குருபக்சானி கூறியதாவது,

இந்த குழந்தைகளின் தாய், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வெகுநாட்களாக சேமித்து வைத்தது இந்த பணம் என்றார். மேலும், இந்த இரண்டு குழந்தைகளின் தாய் இறந்தபிறகு, இந்த குழந்தைகள் இருவரையும் வீட்டில் உள்ள ஒரு கொட்டிலில் அடைக்க வைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது அவர்களது தந்தையும் மறைந்து விட்டதால், அவர்களை தாங்கள் அரவணைத்து உள்ளதாகவும்,  அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் கொடுத்த பிறகுதான் இந்த விவரம் தெரிய வந்தது என்றும் கூறினார்.

அவர்களது தந்தைவழி வீடு ஒன்று சரத்வாடா கிராமத்தில் உள்ள ஆர்.கே.புரம் பகுதியில் இருந்தது. இதுகுறித்து போலீசார் உதவியை நாடினோம். அவர்களின் உதவியுடன் அந்த கிராமத்திற்கு சென்று, அங்கு பூட்டப்பட்டிருந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அந்தை வீட்டை திறந்து உள்ளே சென்றபோது,  அங்குள்ள ஒரு பெட்டியில் சில நகைகளும், இந்த பணமும் இருந்தது தெரிய வந்ததும் என்றும் கூறினார்.

இந்த பணம் மாற்றித்தரக்கோரி, தான் கடந்த 17ந்தேதி ஆர்பிஐ-க்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் மார்ச் 22ந்தேதி இந்த நோட்டுக்கள் மாற்றமுடியாது என்று தனக்கு ஆர்.பி.ஐ பதில் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து, அந்த 16வயது பையன் கூறும்போது, இந்த பணம் மாற்றித்தந்தால், அதை  தனது தங்கையின் பெயரில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்று கூறினார்.

மேலும், தனது தாய் பெயர் பூஜா பஞ்சாரா என்றும், அவர் தினமும் கூலி செய்து வருபவர் என்றார். எதிர்பாராத விதமாக  அவர் கடந்த 2014ம் ஆண்டு தனது தந்தையான ராஜு பண்டாராவால் கொலை செய்யப்பட்டு விட்டார் என்றும், தனது தந்தையும் சிறிது காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார் என்றும் கூறினார்.

இந்த பணத்தில் 171 நோட்டுக்கள்  500, 100 ரூபாய் நோட்டுக்களாக  உள்ளது.

இந்த அனாதை உடன்பிறப்புகளின் கோரிக்கையை பிரதமர் பரிசீலிப்பாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.