கோலாப்பூர்,

ருசில ஆயுர்வேத மருத்துவர்கள், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இது செய்வது தவறு. இதுபோல செய்பவர்கள் தேச விரோதிகள் என்றார் மத்திய அமைச்சர்.

மத்திய ஆயுஷ் மந்திரி ஸ்ரீபெட் நாயக், ஆயுர்வேத ஆராயச்சி நிலையத்தை கோலாப்பூரில் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, மருத்துவர் அல்லாதவர்கள்  ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரை செய்வது தேச விரோதம் என்று கூறினார். மேலும், உலகிலேயே பழமையான மருத்துவம் ஆயுர்வேதம் என்றும், இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் என்றார்.

எத்தனையோ நோய்களுக்கான மருத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஆயுர்வேதம் மூலம்  எத்தனையோ நோய்கள் குணமாகி வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும்,

இந்த கோலாப்பூரில் மருத்துவ பூங்காவில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள தாவரங்கள் உள்ளன. இந்த செடிகள் குறித்தும், அதற்கான மருத்துவ குணங்கள்க குறித்தும் ஆராய வேண்டும் என்றும் கூறினார்.

ஆயுர்வேத மருந்து குறிப்புகள்  பெரும்பாலானவை சமஸ்கிருத மொழியில் உள்ளதால், ஆயுர்வேதம் படிப்பவர்கள் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்றார். இதற்காக ஆயுர்வேதத்தில் சமஸ்கிருதம் வழி (சமஸ்கிருத மீடியம்) கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

இந்தியாவின் பரம்பரை வைத்தியமான ஆயுர்வேதம் மற்றும் யோகாவுக்கு உலக மருத்துவ ஆராய்ச்சி கழகம் (who) அனுமதி உள்ளது.  இதன் காரணமாக உலக அளவில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்துகள் ஆயுர்வேதம் மூலமாக தீர்க்கும் நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அரசின் ஆயுஷ் துரையின்கீழ்,  ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற துறைகள் இயங்கி வருகிறது.