டில்லி

ருவர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பம் அளிக்கும் போதே உறுப்பு தானத்தைத் தேர்வு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஓட்டுநர் உரிமத்துக்கான விண்ணப்பப் படிவங்களில், ஒருவர் தனது உறுப்புகளையும் தானம் செய்யலாம் என்ற புதிய பகுதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டி சாலை விபத்தில் அவர் உயிர் இழக்க நேர்ந்தால் அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதற்கான உறுதிச்சான்றாகும்.

மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் தேவையான திருத்தம் இதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.  நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டைக் கொண்டாடும் அம்ருத் மகோத்சவ் விழாவையொட்டி உறுப்பு தானத்தையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இனி புதிதாக ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பம் அளிப்போர் மற்றும் பழகுநர் உரிமம் பெறுபவர்கள், உரிமம் புதுப்பிப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த உறுப்பு தானத்தையும் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.