எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போட்ட ஓபிஎஸ்

Must read

சென்னை:

பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது பன்னீர்செல்வம் வழங்கி ஒரு கடிதத்தை மைத்ரேயன் கவர்னரிடம் வழங்கியுள்ளார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் உறுதி அளித்திருந்தார்.  எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆதரவு எம்எல்ஏ.க்கள் பட்டியலை கவர்னரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரியிருந்தார்.

இந்நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்தித்து பேசினர்.இச்சந்திப்பின் போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடுத்த ஒரு கடிதம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது.

அதில் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கும் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலில் என்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதிகம் இருக்கின்றனர். அதனால் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என அதில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

More articles

Latest article