சென்னை; தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அகமதாபாத் புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஒபிஎஸ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… தர்மம் மீண்டும் வெல்லும்” என்றார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈபிஎஸ் தரப்புடன் சமாதானத்துக்கு தயார் என ஓபிஎஸ் எதிர்ப்பு  கூறியதாகவும், ஆனால் கண்டிசன் போட்டதாகவும், அதனால்,  ஒபிஎஸ் தரப்புடன் சமாதானத்துக்கு தயார் இல்லை என ஈபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் முடிவு செய்யும்  என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்,  பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வைத்து இன்று (ஜூலை 29) பன்னீர் செல்வம் சந்தித்தார்.  பின்னர், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த ஓபிஎஸ்,  தனது உடல்நிலை குறித்து மட்டுமே பிரதமர் மோடி கேட்டதாக தெரிவித்தார். ஆனால், இபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவில் ஏற்பட்டுள்ள  உட்கட்சி மோதல் குறித்து பேசவே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பதில் அளிக்க மறுத்த ஓபிஎஸ், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… தர்மம் மீண்டும் வெல்லும். ” என்று கூறிவிட்டு சென்றார்.