சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.10 மணி முதல் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளனார்.

30 நிமிடங்களை கடந்து அவர் இவ்வாறு மவுனத்துடன் தியானம் செய்து அஞ்சலி செலுத்தி வருகிறார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இவ்வாறு தியானத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் உண்ணாவிரதம் இருக்கும் தகவல் அறிந்து அதிமுக தொண்டர்கள் அங்கு குவிய தொடங்கியுள்ளனர். எம்பி., எம்எல்ஏ.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பாதுகாவலர்களுடன் வந்து தனியாக இந்த தியானத்தில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார்.
இதனால் எதும் அரசியல் மாற்றம் வருமோ என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மெரினா அடுத்த புரட்சிக்கு தயாராகி வருகிறதோ என்று கருத்து எழுந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel