சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அவருக்கான எதிர்ப்புகள் தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது.

சமூகவலைதளங்களில் சசிகலாவை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டிருக்கும் சசிகலா போஸ்டர்களில், அவரது உருவம் கிழிக்கப்படுகிறது.

அதே நேரம் தற்போதைய முதல்வர் ஓ.பி.எஸ்ஸை பலரும் ஆதரிக்கிறார்கள். இவரே முதல்வராக நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று இரவு திடீரென ஓ.பி.எஸ், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார்.

அங்கு நாற்பது நிமிடங்கள் தியானம் செய்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

தற்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே இன்று மாலை, அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்ததாக தகவல் உலவுகிறது.

அக்கடிதத்தில், தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்றும் அ.தி.மு.க.வில் இருந்து விலகிவதாகவும்.. அதாவது ஒட்டுமொத்த அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்திருக்கிறார் என்றும் அதை படித்த சசிகலா அதிர்ச்சி அடைந்தததாகவும் தகவல் உலவுகின்றன.

ஓ.பி.எஸ்ஸின் விலகலை சசிகலா ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.