சென்னை:

சிகலாவின் பினாமியாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நேற்று பதவி ஏற்றுள்ளார். நாளை தமிழக சட்ட மன்ற பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை  பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று இரவு திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து, அவரது பினாமியாக தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார். இதையடுத்து  நேற்று மாலை அவர் முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டது.

இதன் காரணமாக ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்நிலையில் முன்னாள் முதல்வர்ல தங்கியுள்ள  கிரீன்வேஸ் சாலையில் உள்ள  இல்லத்துக்கு, பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று இரவு 10.40 மணிக்கு வந்தார். சுமார் 30 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

தமிழகத்தில் புதிய முதல்வர் பதவியேற்றுள்ள இந்த சூழலில் ராஜா – ஓபிஎஸ் சந்திப்பு  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.