நாளை வரை முதல்வராக இருப்பாரா எடப்பாடி? :  பாஜக அமைச்சர் பொன்ரா சந்தேகம்

Must read

டப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே சந்தேகம்தான்” என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

இன்று காலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “நாளை தமிழக சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறாரே புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “குடும்ப ஆட்சியை வர விட க்கூடாது. . எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே கேள்விக்குறிதான்.  தமிழகம் தற்போதைய முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்காது” என்றார்.

மேலும், “இப்படி ஒரு சூழல் நிலவுவதால் திமுக ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் நினைப்பதாக அர்த்தமில்லை” என்றும் தெரிவித்தார்.

More articles

Latest article