முதி

நேற்றைய குரு பூஜையின் போது தேவர் நினைவிடத்துக்கு ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை.

நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குருபூஜை நடந்தது.  கமுதி அருகே நடந்த இந்த பூஜையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.  பிரதமர் மோடி இது குறித்த செய்தியை ரோம் நகரில் இருந்து வெளியிட்டார்.   ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை/

அதிமுக பொருளாளர் மற்றும் முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் அங்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்  அப்போது செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன், “ஆண்டு தோறும் தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தி வருகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேவர் சிலைக்குத் தங்கக் கவசம் அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தனது மனைவி இறந்த துக்க திதி நாளை முன்னிட்டு வரவில்லை. நவம்பர் 1-ம் தேதி தேவர் நினைவிடத்துக்கு வந்து அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தேவர் நினைவிடத்துக்கு வரவில்லை. அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.