டில்லி:

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விவாதிக்க  நாடாளுமன்ற மேலவையில் விவாதிக்க 14 கட்சிகள் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

2வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாரதியஜனதா அரசு, மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் கோஷத்தை முன்னிறுத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து விவாதித்தது.

இந்த நிலையில், தேர்தல் சீர்திருத்தம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு மீதான நம்பகத்தன்மை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் 14 எதிர்க்கட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் அட்மி கட்சி, கேரள மணி காங்கிரஸ் , ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இந்த நோட்டீசை வழங்கி உள்ளனர்.