பாட்னா

ரும் 2024 ஆம் வருடம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று ஆலோசித்து வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் இடையே சுமுகமான ஒருமித்த கருத்து உருவாகாத நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என  6 மாநில முதல்வர்கள் உட்பட 16 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜூலை 10 அல்லது 12 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும் எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்து உள்ளார். கூட்டம் முடிந்ததும் நிதிஷ்குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,

”இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்கத் திட்டமிட்டு உள்ளோம்.  அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ”

என்று கூறினார்.